இலங்கை கிரிக்கெட் வீரருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!

641

இலங்கை அணியின் முன்னாள் வீரர் சாமர சில்வாவுக்கு விதிக்கப்பட்ட இரண்டாண்டுகள் தடை உத்தரவு தற்காலிகரமாக நீக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் பண்டுரா கிரிக்கெட் கிளப் மற்றும் களுத்தர கலாச்சார சங்கம் இடையில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் இரு அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களும் வேண்டுமென்றே சரியாக விளையாடவில்லை என குற்றம்சாட்டபட்டது.

இதையடுத்து இரு அணி தலைவர்களான சாமர சில்வா மற்றும் மனோஜ் தேஷப்பிரியாவுக்கு இரண்டாண்டுகள் கிரிக்கெட் விளையாடவும் அது தொடர்பான விடயங்களில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது.

அணியில் இடம்பெற்ற மற்ற வீரர்களுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. இதோடு இரு அணிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. சமர சில்வா இலங்கை சர்வதேச அணிக்காக கடந்த 2011 வரை பல போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில், தடை உத்தரவை நீக்க சாமர சில்வா உட்பட தடைசெய்யப்பட்ட வீரர்கள் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திடம் மேல்முறையீடு செய்தனர்.

இதையடுத்து, தடை செய்யப்பட்ட வீரர்களின் தடை உத்தரவு தற்காலிகரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட வீரர்களின் மேல்முறையீட்டு கோரிக்கையின் முடிவு வெளியாகும் வரை உள்நாட்டு கிரிக்கெட்டில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.