அஜித்தின் ஆரம்பம் படத்தை வெளியிட தடைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

596

Aarambam

அஜித், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆரம்பம். இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில் படத்தை தீபாவளிக்கு முன்னதாக அக்.31ம் திகதி வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் ஆரம்பம் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பி.அனந்த கிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறார். அவர் அளித்துள்ள மனுவில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கு கடந்த 2005ம் ஆண்டு கேடி என்ற படத்திற்காக 1 கோடியோ 50 லட்சம் பைனான்ஸ் செய்துள்ளதாகவும் அதை அவர் திரும்பத் தராததால் தற்பாது அவர் தயாரித்துள்ள ஆரம்பம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும் என்று தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் ஏ.எம்.ரத்னமோ இந்த படத்தின் தயாரிப்பாளார் நான் இல்லை என்றும் ஏ.ரகுராம் என்பவர்தான் சத்ய சாய் மூவிஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கிறார் என்றும் பதில் அளித்துள்ளார்.