புகைத்தலின் காரணமாக இலங்கையில் வருடத்திற்கு 20,000 பேர் உயிரிழப்பு!!

379

AntiSmokingCampaigns1

புகைத்தலின் காரணமாக வருடம் ஒன்றிற்கு 20 000 பேர் வெவ்வேறுபட்ட நோய்களுக்கு முகங்கொடுத்து உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாள் ஒன்றிற்கு1000 பேர் வெவ்வேறுபட்ட நோய்த்தாக்கங்களுக்கு உட்பட்டு உயிரிழக்கும் அதேவேளை இதில் 60 வீதமானவர்கள் தொற்றா நோய்களின் காரணமாக உயிரிழப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த 60 வீதமானவர்களில் அநேகர் புகைத்தலினால் ஏற்படும் நோய்களின் காரணமாக உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் சுட்டிக் காட்டினார். புகைத்தலினால் ஏற்படும் புற்றுநோய் மற்றும் பல நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 150 லட்சம் ரூபா செலவிடப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வாறு பெருந்தொகை பணம் செலவிடப்பட்ட போதும் அவர்களது உயிரைக் காப்பாற்ற முடியாதுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொலன்நறுவை, அரலங்வில பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.