மன அழுத்தத்தை தவிர்பது எப்படி!!

408

depressionஉங்களுக்காக ஏதாவது செய்யுங்கள் : வேலைகளை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்தால், உங்களுக்கு நீங்களே பரிசு பொருட்கள், சொக்லட் போன்றவற்றை பரிசளியுங்கள்.

பிடித்த இசையை கேட்டு மகிழுங்கள் : மன அழுத்தத்தை நீக்கும் வகையில் உள்ள இசையை கேட்டு அமைதி பெறுங்கள். முக்கியமாக அதிக தாளத்துடன் கூடிய இசையை கேட்டு, மனநிலையை ஊக்கப்படுத்துங்கள்.

எளிய உணவை சமையுங்கள் : சமைப்பது என்பது ஒரு சிகிச்சை போன்றதாகும். இது மனஅழுத்தம் தரும் விஷயத்தில் இருந்து மனதை மாற்றும். மேலும் சுவையான ஆரோக்கியமான உணவையும் உண்ணலாம்.

வசதியான ஆடைகளை அணியுங்கள் : வீட்டிற்கு சென்றதும் ஆடைகளை மாற்றி, பருத்தி துணியால் செய்யப்பட ஆடைகளை அணியுங்கள். இது நிச்சயம் உடலை ரிலாக்ஸ் அடையச் செய்து, மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும்.

உங்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்குங்கள் : வீட்டில் ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கே அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து அமைதியை பெறுங்கள். கண்டிப்பாக ஓய்வு எடுக்கும் நேரம் கைபேசியை எல்லாம் அணைத்துவிடுங்கள்.

முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுங்கள் : இந்த எளிய வழி உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். அதிலும் இதனால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்குவதால், முகம் குளிர்ச்சி அடைந்து புத்துணர்ச்சி பெறும்.

மெதுவாகவும், ஆழமாகவும் மூச்சு விடுங்கள் : மெதுவாக, ஆழமாக மூச்சு விடுவதால், இரத்தக் கொதிப்பு குறையும். முக்கி யமாக யோகாவில் உள்ள பிராணயாமம் முறைப்படி மூச்சு விட்டால், அதாவது ஒரு துவாரத்தில் மட்டும் மூச்சு விடுவதால், உங்கள் கவலைகள் நீங்கும்.

தூக்கம் அவசியம் : இன்னும் கொஞ்சம் நேரம் வேலை பார்த்தால், அதிக வேலைகளை செய்து முடிக்கலாம் என்று மனம் நினைக்கும். ஆனால் தூக்கம் மிகவும் அவசியம். போதுமான அளவு தூக்கம் கண்டிப்பான முறையில் அவசியமான ஒன்றாகும்.

தலைக்கு மசாஜ் செய்து பாருங்கள் : தலைக்கு மசாஜ் செய்வதால், தலையில் ரத்த ஓட்டம் சீராகும், தலைவலி குறையும், தூக்கம் அதிகரிக்கும், மன அழுத்தம் நீக்கும் மற்றும் இதர நோய்களில் இருந்தும் காக்கும்.

எழுதும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள் : எழுதும் பழக்கத்தை ஏற்படுத்துவது, உங்களுடன் நீங்களே உரையாட ஒரு வாய்ப்பாக அமையும். மேலும் இது மன அழுத்தத்தையும் குறைக்கும். எந்திர வாழ்க்கை, எதிலும் உறுதியற்ற தன்மை,

இதுபோன்ற முறையற்ற தன்மையால் மன அழுத்தம் இல்லாமல் இன்றைய வாழ்க்கை இல்லை என்று கூறுமளவிற்கு நிலைமை வந்துவிட்டது. எனவே மேற்கண்ட உணவு மற்றும் பழக்கவழக்கங்களை கடைபிடித்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும்.