அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவரின் விபரம் வெளியானது..!

581

2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியுள்ள நிலையில், அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவரின் விபரம் வெளியாகியுள்ளது.

நீர்கொழும்பு, ஹரிசந்திர மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தினுக்க கிரிஷான் குமார என்ற மாணவர் 198 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதயில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

பரீட்சை முடிவுகளை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.