வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலய மாணவி மாவட்ட ரீதியில் 6ஆம் இடம்!!

1262

புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04.10) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலய மாணவி மனோகரன் கனிஷா 185 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 6வது இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் திருமதி நந்தபாலன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

46 மாணவர்கள் புலமைப்பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இதில் 09 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்து  பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

185புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் ஆறாவது  இடத்தினை பெற்ற மாணவி உட்பட 9 மாணவர்களும்  ஆசிரியர்களதும், பெற்றோர்களதும் அயராத முயற்சியினால் புலமைப்பரீட்சையில் திறமைச் சித்தியினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.

இம்மாணவர்களுக்கு  வவுனியா நெற்  நிர்வாகமும் தனது பாராட்டுக்களை  தெரிவித்து கொள்கின்றது.