தாயார் மற்றும் சகோதரர் சடலத்துடன் ஒருவருடமாக வாழ்ந்த நபர் : உருக வைக்கும் காரணம்!!

506

உயிரிழந்த தாய் மற்றும் சகோதரரின் சடலத்துடன் ஒருவருடம் தனியாக வாழ்ந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் மின்னிசோட்டா மாகாணத்தின் வொயிட் பியர் லேக் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் ஜேம்ஸ் குயுப்லர்.
இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, பொலிசார் ராபர்ட் வீட்டுக்கு சென்று சோதனை செய்த போது அதிர்ச்சியளிக்கும் விதமாக இரண்டு சடலங்கள் அழுகிய நிலையில் இருந்துள்ளது.

இறந்த சடலங்களில் ஒன்று ராபர்டின் தாய் ஈவ்லின் (94) என்பதும், மற்றொன்று அவரின் சகோதரர் ரிச்சர்ட் என்பதும் தெரியவந்துள்ளது.

தாய் மற்றும் சகோதரரை பிரிந்து வாழ மனம் இல்லாததாலும், அவர்களை புதைக்க விரும்பாததாலும் சடலங்களை வீட்டிலேயே ராபர்ட் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில், சடலத்தை வீட்டில் வைத்திருப்பது சட்ட விரோத செயல் என்பதால் ராபர்டுக்கு ஒருவருடம் வரை சிறை தண்டனையும், $3,000 அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.