உங்கள் கையடக்க தொலைபேசியில் தமிழ் இணையத் தளங்களை பார்க்க முடியவில்லையா?

442

tamil-fonts

உங்கள் கையடக்க தொலைபேசியில்  தமிழ் இணையத் தளங்களை பார்க்க முடியவில்லை என்றால் கீழே தரப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்.

1.உங்கள் கையடக்க தொலைபேசியில் உள்ள GPRS வசதியை செயற்படுத்தி http://www.opera.com/mini இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினியை தரவிறக்கி கையடக்க தொலைபேசியில் நிறுவி கொள்ளுங்கள்.

2. கையடக்க தொலைபேசியில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:con fig என்று கொடுத்து OK கொடுக்கவும்.

3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.

4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

இனி உங்கள் கையடக்க தொலைபேசியில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்.