அங்கங்களை இழந்தவர்களுக்கு முல்லைத்தீவு வைத்தியசாலையில் கட்டடத் தொகுதி : சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம்!!(படங்கள்)

326

யுத்த காலத்தில் தமது அங்கங்களை இழந்தவர்களுக்கு வைத்தியசாலைக் கட்டிடத் தொகுதியில் பிரத்தியேக பகுதியில் விசேட இணைப்பை ஏற்படுத்துவதுடன், சுகாதாரக் குறைபாடுகளை குறைப்பதற்கு எம்மால் முடிந்தவரை பணியாற்றுவது உறுதி என்று வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், தனது முதல் விஜயமாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று, வடமாகாண சபையின் துணை அவை முதல்வரும் புனர்நிர்மாணம், மக்கள் இணக்கப்பாடு, மீள் குடியேற்றம் அமைச்சருமாகிய அன்ரன் ஜெயநாதனைச் சந்தித்து கலந்துரையாடினார்.

அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் அருட்தந்தை மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள், மக்கள் என பலரையும் சந்தித்த வடமாகாண சுகாதார அமைச்சர்,

வடக்கில் என்றும் எம் மனக்கண் முன் இருப்பது முல்லை மண். தமிழர்களின் வீரம் நிறைந்த போராட்டத்திற்கு இன்று வரை உலக கடைசி எல்லை வரை தமிழ் இனத்தை தூக்கிச் சென்ற உன்னத நிலம். இதனை யாரும் மறக்கவில்லை.

அந்த வகையில் மதிப்புக்குரிய ஜெயநாதன் ஐயாவிற்கு வழங்கிய அமைச்சுக்களுக்கு அப்பால் ஏனைய நான்கு அமைச்சுக்களும் தமது முழு பார்வையையும் இந்த மாவட்டத்தையே குறிவைத்துள்ளனர். நான் கூட எனது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் எனது உத்தியோக விஜயம் கூட இங்கு தான் மேற்கொண்டுள்ளேன்.

அன்மையில் கூட மற்றய எம் சக அமைச்சர் கூட இங்கு வந்திருந்தார். இவ்வாறாக இழப்புக்கள் ஈடு செய்ய முடியாததாயினும் எம்மால் முடிந்த வரை எமது பணி தமிழர் தாயகம் எங்கும் பாகுபாடின்றி தொடரும்.

குறிப்பாக யுத்த காலத்தில் தமது அங்கங்களை இழந்த எம் உறவுகட்கு வைத்தியசாலைக் கட்டிடத் தொகுதியில் பிரத்தியேக பகுதியில் விசேட இணைப்பை ஏற்படுத்துவதுடன் சுகாதாரக் குறைபாடுகளை குறைப்பதற்கு எம்மால் முடிந்தவரை பணியாற்றுவது உறுதி என்ற சுகாதார அமைச்சர் உங்கள் குறைகளை மதிப்புக்குரிய ஜெகநாதன் மூலம் தெரியப்படுத்தலாம் எனவும் குறிபிட்டார்.

12 3 4 5 6 7 8