ஒட்டிசுட்டான் பகுதியில் இருந்து 17 வயது யுவதி ஒருவரை தவறான நோக்கதுடன் அழைத்து வந்தவர் வவுனியாவில் பிடிபட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பகுதியில் இருந்து 17 வயது யுவதி ஒருவரை தந்திரமாக அப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரான 40 வயது நபர் ஒருவர் அழைத்து வந்துள்ளார். ஒட்டிசுட்டானில் இருந்து நேற்று பிற்பகல் வவுனியா நகருக்கு வந்து ஆட்டோ ஒன்றில் இருவரும் ஏறிய போது அவர்களின் நடத்தையில் சந்தேகம் கொண்ட நகரில் ஆட்டோ ஓடும் இளைஞர்கள் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பிடித்துள்ளனர்.
குறித்த நபர் தனது சகோதரரின் வீட்டில் வைத்தே பிடிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வவுனியா சிறுவர், பெண்கள் பாதுகாப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த யுவதியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த நபரை எச்சரித்தபின் பொலிசார் விடுதலை செய்துள்ளனர்.
இதேவேளை குறித்த நபர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி இவ்வாறு தொடர்ச்சியாக பெண்களை கூட்டிவருபவர் என அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.




