வவுனியாவில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி!!(படங்கள்)

751

வவுனியா விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களால்  வவுனியா சர்வோதய நிலையத்தில் இன்று சுயதொழில் முயற்சியாளர்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி இடம்பெற்றது.

சர்வோதய சிரமதான சங்க உறுப்பினர்களுக்கும் தேசோதய சபை உறுப்பினர்களுக்கும் கிராம மட்டத்தில் காளான் வளர்ப்பை ஊக்கப்படுத்துவதற்காக இப் பயிற்சிநெறி இடம்பெற்றதாக சர்வோதய நிலையத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எஸ்.உதயகுமாரன் தெரிவித்தார்.

இப் பயிற்சிநெறியில் வவுனியா விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களான எஸ்.யாமினி மற்றும் கே.பிருந்தா ஆகியோர் காளான் வளர்ப்பு சம்பந்தமான செய்முறை விளக்கங்களை அளித்தனர்.

vavuniyavavuniya2 vavuniya3