இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை கடத்தி மூன்று நாட்களாக சிறுவன் ஒருவன் உள்ளிட்ட ஐவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.
ராஜ்கோட் அருகேயுள்ள மபாடியா பாரா என்ற இடத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட 20 வயது பெண் ஒருவர் அவரது பெற்றோருடன் வசித்து வந்தார். திருமணமான இவர் மனநிலை பாதிப்படைந்ததால் இவர் கணவரைவிட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்துவருகிறார்.
இந்நிலையில் இவரை இம்மாதம் 13ம் திகதி பலகாரம் வாங்கி தருவதாக ஆசைகாட்டி அப்பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டிற்கு நத்தா கோலி என்பவர் அழைத்து சென்று அங்கு ஏற்கனவே காத்திருந்த மேலும் 5 பேருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.
இப்படியே தொடர்ந்து 3 நாட்கள் அந்த வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட அந்த பெண்ணை அவ்வழியாக சென்ற ஒரு சிறுமி பார்த்துவிட்டு பெண்ணின் வீட்டிற்கு தகவல் அளித்தார்.
இதனையடுத்து காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இக்கொடூரத்தை செய்த ஐந்து பேரில் 15 வயது சிறுவனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.





