புகையிரதப்பாதையில் இளம்பெண் தலை துண்டித்து மரணம், இரண்டு கால்களையும் இழந்த காதலர்!!

555

Trainஉக்ரைன் நாட்டில் த்ரில் அனுபவத்துக்காக புகையிரதப் பாதையில் உல்லாசம் அனுபவித்த காதல் ஜோடி மீது புகையிரதம் மோதியது. ஜபோரோசி என்ற நகரில் இச்சம்பவம் நடைபெற்றது. காதலனுக்கு வயது 41. காதலிக்கு வயது 30. சம்பவத்தின்போது இருவரும் குடிவெறியில் இருந்தனர்.
புகையிரதம் மோதியதில் காதலி இறந்து விட்டார். காதலனுக்கு இரண்டு கால்களும் துண்டாகி விட்டன. அவர் பொலிசில் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் இப்படி செய்து விட்டதாக தெரிவித்தார்.

தன்னுடைய காதலியுடன் நண்பருடைய மதுவிருந்து ஒன்றில் கலந்துவிட்டு, திரும்பும் வழியில் தங்களுக்கு அடக்க முடியாத உணர்ச்சி ஏற்பட்டதாகவும், ஒரு த்ரில் அனுபவத்தை பெறுவதற்காக ரயில் தண்டவாளத்தில் உறவு வைத்ததாகவும், அந்த நேரத்தில் எதிர்பாராத வந்த ரயில் மோதி தன்னுடைய காதலி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் தானும் தன்னுடைய இரண்டு கால்களை இழந்துவிட்டதாகவும் கண்ணீர் மல்க ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதுபோல், கடந்த 2008ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் புகையிரதப் பாதையில் உறவு கொண்ட ஒரு காதல் ஜோடி புகையிரதம் மோதி இறந்தது குறிப்பிடத்தக்கது.