தரமற்ற பெற்றோலுடன் வந்த கப்பல் திருப்பியனுப்ப காரணம் என்ன- IOC நிறுவன பணிப்பாளர் கருத்து!

844

IOC நிறுவனத்தால் இலங்கைக்கு தரமற்ற எரிபொருளைக் கொண்டுவந்த டோர்ம் அஸ்ட்ரீட் என்ற குறித்த கப்பல் 30,000 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் 15 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது. எனினும், பெற்றோலின் தரம் தொடர்பில் எழுந்த சிக்கல் காரணமாக 17 ஆம் திகதி கப்பலைத் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் கப்பல் தொடர்ந்தும் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

இந்தவிடயம் குறித்து சக்தி   செய்திப் பிரிவினர் லங்கா IOC நிறுவனத்தினரிடம் வினாவினர் இதற்கு பதிலளித்த முகாமைத்துவ பணிப்பாளர் ஷியாம் போரா….



இதனை நிராகரிப்பதற்கு காரணம் அதிலுள்ள சுத்தம் இன்மை காரணமே எனினும் இதிலுள்ள இரசாயண தன்மை வழமைபோன்று உள்ளது. எனினும் அதன் தோற்றம் மாறாக உள்ளது அது தேவைக்கு பொருத்தமற்ற முறையில் உள்ளது. அதுதான் நிராகரிக்கப்படுவதற்கான காரணமாகும். இதனை ரஷ்ய நிறுவனம் ஒன்றிலிருந்து இறக்குமதி செய்தோம். அது உலக எண்ணெய் வழங்கலில்மு தல் 10 இடங்களில் ஒன்றாகும்.

வழங்குனர் உரிமையை மாற்றியிருக்க வேண்டும். அதனை அவர்களுக்கு அறிவித்திருந்தோம் அதனை மீள்பரிசீலனை செய்ய சந்தர்ப்பம் கோரியிருந்தனர். அந்தப் பரிசோதனையிலும் நிராகரிக்கப்பட்டது.

உடனடியாக விலைமனு கோரலுக்கு சென்றோம் அதன்பிறகு எமது உற்பத்தியை நேற்று கப்பலில் ஏற்றியுள்ளோம் 10 ஆம் திகதி கப்பலொன்று இங்கு வந்தடையும். அவர்கள் பின்பற்றிய வழிமுறைகளை ஆராய்ந்து பார்த்து இதற்கான நட்டத்தினை கோர நாம் எதிர்பார்த்துள்ளோம் பெற்றோலை மாற்றித்தர இதுவரை இணங்கவில்லை அதனை மாற்றாவிடின் சட்டநடவடிக்கை எடுப்போம். நாம் எமது பிரதான அலுவலகத்திற்கு அறிவித்துள்ளோம்.இலங்கைக்கு வெளியே இந்தக் கப்பலை கொண்டு செல்ல அனுமதி வேண்டும் சுங்கம் மற்றும் துறைமுகம் இதற்கு ஆவணசெய்யவேண்டும் என்றார்