வவுனியா சர்வோதயத்தில் நடைபெற்ற பெண்கள் அரசியலை வலுவூட்டும் செயலமர்வு!!

729

sarvodayaவவுனியா மாவட்ட சர்வோதய நிலையத்தில் நேற்று பெண்களுக்கு அரசியல் வலுவூட்டல் செயலமர்வு இடம் பெற்றது.

சர்வோதய சிரமதான சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் மற்றும் தேசோதய சபை அங்கத்தவர்கள் மற்றும் கிராமமட்ட பாமர மக்களுக்கும் பெண்கள் அரசியலில் உள்வாங்குதலுக்கான தூண்டுதல் சிறப்பு செயலமர்வு மாவட்ட இணைப்பாளர் எஸ். உதயகுமாரன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வவுனியா விவசாய திணைக்கள பிரதி பணிப்பாளர் சகிலாபானு, மற்றும் வவுனியா பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சி நெறியில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ல.புஸ்பகாந்தன், எஸ்.சிந்துஜன் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு பெண்கள் தலைமைத்துவம், மற்றும் பெண்கள் அரசியல் தொடர்பான வளப்பகிர்வை வழங்கி பெண்களை வலுவூட்டினர்.