சச்சினுடன் 16 ஆண்டுகள் : மனம் திறந்த லக்ஷ்மன்!!

324

laxman_sachinசச்சினை போன்ற மிகப்பெரிய வீரருடன் சேர்ந்து 16 ஆண்டுகள் விளையாடியது மிகப் பெரிய கெளரவம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் லக்ஷ்மன் புகழ்ந்துள்ளார்.

இந்திய அணியின் சச்சின் மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான டெஸ்ட் போட்டியுடன் (நவம்பர் 14-18 ) சர்வதேச அரங்கிலிருந்து விடை பெறுகிறார்.

இது குறித்து நான்காவது இன்னிங்ஸ் நாயகன் என்றழைக்கப்படும் முன்னாள் டெஸ்ட் அணியி வீரர் லக்ஷ்மன் கூறுகையில் சச்சின் தனித்திறமையானவர். எப்போதுமே புத்துணர்ச்சியுடன் விளையாடக்கூடியவர். காயத்திலிருந்து மீண்டு வந்து அணிக்காக விளையாடியது எங்களுக்கு ஊக்கம் தந்தது.

கிரிக்கெட்டில் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த விளையாட்டு நட்சத்திரங்களுக்கும் ரோல் மொடலாக உள்ளார். ஓட்டங்களில் சாதனை செய்தது தவிர நல்லதொரு மனிதராகவும் இருந்தார்.

இவருடன் 16 ஆண்டுகள் இணைந்து செயல்பட்டதை பெருமையாக நினைக்கிறேன். 16 வயதில் எப்படி உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டார். இதிலிருந்துதான் நான் அதிகம் கற்றுக் கொண்டேன்.

கடந்த 1996ல் டெஸ்டில் நான் அறிமுகமானபோது சச்சின்தான் அணித்தலைவர். அப்போது, ஆடுகளம் மற்றும் டிரெசிங் ரூமில் சகஜமாக பழகுவார். ஒரு ஆண்டில் சுமார் 250 நாட்கள் பல்வேறு இடத்திற்கு சேர்ந்தே பயணித்துள்ளோம்.

இதிலிருந்து ஒரு குறிப்பிட்ட நிகழ்வை மட்டும் சொல்வது கடினமானது. இந்தியாவில் இவரை கடவுளை போன்று பார்க்கின்றனர். சுமார் 23 ஆண்டுகளுக்கு மேல் விளையாடிய இவர் இதுவரை எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காதவர். இவரை மற்ற வீரர்களுடன் ஒப்பிட முடியாது.

என் வாழ்க்கையில் இப்படி ஒரு வீரரை பார்த்தது கிடையாது. 200 டெஸ்டில் சச்சினால் மட்டுமே பங்கேற்க முடியும். கடவுளின் குழந்தையான இவரைப்போல யாராலும் சாதனை புரிய முடியாது.

விளையாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார் என்றும் எதிர்காலத்தில் கிரிக்கெட்டிற்கு ஏதாவது செய்வார் எனவும் கூறினார்.