வடகொரியா மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ட்ரம்ப் வலியுறுத்தல்!!

1075

வடகொரியாவின் அணுஆயுத அச்சுறுத்தல்களை தவிர்க்க சீனா உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 11 நாட்கள் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், தற்போது ட்ரம்ப் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த வியஜத்தின் போது கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ்மிக்க மண்டபத்தில் ஆயிரக்கணக்கான சீன மக்கள் மத்தியில் டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றினார்.

இதன் போது வடகொரியாவின் அணுஆயுத அச்சுறுத்தல்களை தவிர்க்க சீனா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நேரம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் வேகமாக செயல்பட வேண்டும். வடகொரியாவின் அச்சுறுத்தல்களை தடுக்க சீனா உடனடி நடவடிக்களை எடுக்க வேண்டும். பிற நாடுகளைக் காட்டிலும் சீனா இதில் சிறப்பாக செயல்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.