நள்ளிரவு முதல் விலைகள் குறைவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை!!

268

இறக்குமதி செய்யப்படுகின்ற அத்தியவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விஷேட பண்ட வரி குறைக்கப்பட்ட போதிலும் அவற்றின் பிரதிபலன் நுகர்வோருக்கு கிடைப்பதற்கு இன்னும் சில நாட்களாகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 08ம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நிதியமைச்சர மங்கள சமரவீரவினால் இவற்றின் விலைகள் குறைக்கப்பட்டன.

எவ்வாறாயினும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வௌியிடப்படவில்லை என்பதுடன், அடுத்த வாரமளவில் வர்த்தமானி வௌியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

விலை குறைக்கப்பட்ட அத்தியவசிப் பொருட்களுக்காக புதிய விலை நிர்ணயிப்பதற்குறிய அரம்ப கட்ட பேச்சுவார்த்தை தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நுகர்வோர் சபையினால் விலைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.

உருளைக் கிழங்கு ஒரு கிலோ கிராம் மற்றும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ அகியவற்றுக்கான வரி 39 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ கிராம் பருப்பிற்கான வரி 12 ரூபாவினால் குறைக்கப்பட்டது.

இது தவிர மேலும் சில அத்தியவசியப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.