குளிர்பானங்களை விடவும் பியர் உடலுக்கு நன்மையானது!!

238

அதிக சீனியைக் கொண்ட குளிர்பானங்களை விடவும், பியர் வகைகள் உடலுக்கு நன்மையளிக்கும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், சீனி சேர்க்கப்பட்ட குளிர் பானங்களை அருந்துவதனை விடவும், பியர் அருந்துவது நல்லது.

அநேக நாடுகளில் நூற்றுக்கு 80 வீதமானவர்கள் பியர் அருந்துகின்றார்கள். குறைந்தளவானவர்களே அல்கஹோல் செறிவு கூடிய மதுபானம் அருந்துகின்றனர்.

எனினும், இலங்கையில் 84 வீதமானவர்கள் அல்கஹோல் செறிவு அதிகமான மதுபானம் அருந்துகின்றனர்.
பியர் கொஞ்சம் அருந்துவதனை நான் பிழையாக கருதவில்லை. குளிர்பானத்திற்கு சீனி சேர்க்கும் போது உற்பத்தியாளர் மீது வரி அறவீடு செய்யப்படுகின்றது.
அவ்வாறு அன்றி சீனிக்கு வரி அறவீடு செய்யப்படாது. ஒரு சிறிய மென்பான போத்தலில் 100 கிராம் சீனி சேர்க்கப்படுகின்றது என மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி கூறிய போது அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.