கேட்பாரற்று கிடந்த 5.75 லட்ச ரூபாய்: கோடீஸ்வரரை நெகிழவைத்த முதியவர்!!

467

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 5.75 லட்சம் தொகையை முதியவர் ஒருவர் நேர்மையாக பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமார் என்பவர் கடந்த 1ம் திகதி சேலம் விரைவு ரயிலில் சென்னை வந்தபோது அவர் கொண்டுவந்த பையில் 10.75 லட்சம் ரூபாயை பையுடன் தவறவிட்டார்.

இதுகுறித்து எழும்பூர் ரயில்வே பொலிசாரிடம் புகார் அளித்தார், அவர் அளித்த புகாரின் பேரில் ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் உள்ள பணத்தை எடுத்த பொய்யாமொழி என்பவர் அதனை பொலிசில் ஒப்படைத்துள்ளார்.

ஆனால் 10.75 லட்சரூபாயில் 5.75 லட்சம் மட்டுமே இருந்த காரணத்தால், ரயில்வே பொலிசார் கண்காணிப்பு கமெராவை ஆய்வு செய்தபோது, மர்மநபர் ஒருவர் அதில் இருந்த பணத்தை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

பணத்தைக் கொண்டுவந்து கொடுத்த முதியவர் பொய்யாமொழிக்கு ரயில்வே நிர்வாக ஆர்டிஓ பரிசு ஒன்றையும் வழங்கினார்.

திராவிடக் கொள்கையைப் பின்பற்றும் நான் அடுத்தவரின் பொருளுக்கு ஆசைப்படதாவன், பெரியாரை பின்பற்றும் நான் நேர்மையாக நடக்க வேண்டும் என நினைப்பவன் என பொய்யாமொழி கூறியுள்ளார்.

தற்போது இந்த பணம் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர். பெரியவரின் நேர்மையை பார்த்து நெகிழ்ச்சியடைந்த கோடீஸ்வரர், அவருக்கு பணம் கொடுத்தும் அதனை அவர் வாங்க மறுத்துவிட்டார்.