வட மாகாண சபை வவுனியா உறுப்பினர் இந்திரராஜா முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!!

1005

1வடமாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் இ.இந்திரராஜா முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்ற பின்னர் அமைச்சரவை பங்கீடு தொடர்பாக பங்காளிக் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளைச் சோந்த 9 உறுப்பினர்கள் கடந்த 11 ம் திகதி யாழில் இடம்பெற்ற சத்தியபிரமாண நிகழ்வைப் புறக்கணித்து இருந்தனர்.

அதன் பின் அவர்கள் முள்ளியவாய்க்கால், யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா ஆகிய பகுதிகளில் சத்தியப்பிரமாண நிகழ்வை மேற்கொண்டிருந்தனர்.

ஈபிஆர்எல்எப் கட்சி உறுப்பினர்கள் வவுனியாவில் சத்தியப் பிரமாண நிகழ்வை மேற்கொண்ட போது அதில் கலந்து கொள்ளாத ஈபிஆர்எல்எப் சார்பாக வவுனியாவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இ.இந்திரராஜா இன்று முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் முன்னிலையில் யாழில் புதிதாக அமைக்கப்பட்ட வலிவடக்கு பிரதேசசபை மண்டபத்தில் சத்தியப்பிரமாண நிகழ்வை செய்து கொண்டார்.