மகன் முன் மனைவியை கொடூரமாக கொன்று விட்டு நிம்மதியாக உறங்கிய நபர்!!

579

knifஇந்தியாவின் ராஜஸ்தானில் மனைவியை கோடரியால் கொடூரமாக தாக்கி கொன்று விட்டு எதுவும் நடக்காதது போல் தூங்கச் சென்றுள்ளார் ஒருவர்.

இந்த சம்பவம் அவர்களது 6 வயது மகன் முன்பே நடத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் சர்தார்மல் இவரது மனைவி கோத்தி. தனது மனைவிக்கு வேறொரு நபருடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகித்த சர்தார்மல் கோத்தியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்தார்.

இந்நிலையில் இவர்களது வாக்குவாதம் உச்சக்கட்டத்தை அடைந்தப்போது கோத்தியை சர்தார்மல் தாக்க முயற்சித்தார்.
அவரிடமிருந்து தப்பிக்க வீட்டில் இருந்த கோடாரியை கையில் எடுத்து அவரது கணவரை கோத்தி மிரட்டியுள்ளார்.

கோத்தியின் இந்த செயலால் ஆத்திரமடைந்த சர்தார்மல் அவரிடமிருந்து கோடாரியை பிடுங்கி மனைவியை சரமாரியாக முகத்தில் தாக்கினார்.

மனைவி இறந்தது தெரிந்தும் தொடர்ந்து அவரை வெறித்தனமாக தாக்கிய சர்தார்மல் இச்சம்பவம் அவரது 6 வயது மகன் கண் முன் நடக்கிறது என்பதைக்கூட கவனிக்கவில்லை.

இத்தகைய கொடூரத்தை செய்துவிட்டு ஒன்றும் நடக்காததுபோல் சர்தார்மல் தூங்கச் சென்றுள்ளார். பின்னர் அடுத்த நாள் காலை சர்தார்மல்லின் உறவினர் ஒருவர் தகவல் அளித்தப்பிறகுதான் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

விசாரணையில் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட சர்தார்மல் வெகுநாட்களாக வரதட்சணை கேட்டு அவரது மனைவியை துன்புறுத்தியதும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.