சச்சின் ஏன் அப்படி செய்தார் : பொண்டிங் கேள்வி!!

368

Ricky-Pontingஹர்பஜன் சிங் விவகாரத்தில் சச்சின் ஏன் உண்மையை மறைத்தார் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என பொண்டிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு அவுஸ்திரேலியா சென்ற இந்திய அணி சிட்னி டெஸ்டில் பங்கேற்றது அப்போது அவுஸ்திரேலிய வீரர் சைமண்ட்சை இனவெறியை தூண்டும் வகையில் ஹர்பஜன் சிங் பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இதுகுறித்து விசாரித்த போட்டி நடுவர் மைக் புராக்டெர், அடுத்த மூன்று போட்டிகளில் பங்கேற்க ஹர்பஜனுக்கு தடை விதித்தார். இதனால் இரு நாட்டு கிரிக்கெட் உறவு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. பின் நடந்த மேல் விசாரணையில் சம்பவத்தன்று மைதானத்தில் ஹர்பஜன் அருகில் இருந்த சச்சினிடம் விசாரிக்கப்பட்டது.

இதில் ஹர்பஜனுக்கு சாதகமாக சச்சின் பேசியதால் அபராதத்துடன் தப்பினார். சச்சினின் செயல் குறித்து சிட்னி டெஸ்டில் அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவராக இருந்த பொண்டிங் தனது தி குளோஸ் ஒப் பிளே என்ற புத்தகத்தில், ஹர்பஜன் குற்றவாளி என்பதற்கு போட்டி நடுவர் புராக்டெரிடம் போதிய ஆதாரம் இருந்தது.

விசாரணையின் போது சச்சின் இதை மறைத்து விட்டார் ஏன் இப்படிச் செய்தார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்பிரச்னை காரணமாக நாடு திரும்ப போவதாக இந்திய அணி மிரட்டியது. அணியின் அப்போதைய அணித்தலைவர் கும்ப்ளே நாங்கள் விளையாட்டு உணர்வு இல்லாமல் நடந்து கொள்வதாக தெரிவித்தார். இது பிரச்னையை திசை திருப்பியது.

கிரிக்கெட் ஆர்வலர்கள் எங்களது உள்நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு சி.ஏ. நிர்வாகத்தின் தவறும் ஒரு காரணம்.
ஒருவேளை 21ம் நூற்றாண்டில் இந்திய கிரிக்கெட் அடைந்த வளர்ச்சி காரணமாகத்தான் இது நடந்திருக்கலாம் என நினைத்ததாக தெரிவித்துள்ளார்.