வவுனியா நவீன சந்தையில் தண்ணீருக்குப் பஞ்சம்!!

621

vavuniya1வவுனியா நகர பகுதியில் அமைந்துள்ள நவீன சந்தையில் தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது

வவுனியா நவீன சந்தை பகுதியில் 100 க்கு மேற்பட்ட கடைகள் காணப்படுகின்றன இதனால் பல தொழிலாளிகள் இச் சந்தையில் பணி புரிகின்றனர். இவர்கள் தண்ணீர் வசதி இல்லாத காரணத்தினால் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்

இது பற்றி வர்த்தகர் ஒருவர் குறிப்பிடுகையில் கடும் வரட்சியான காலத்தில் தண்ணீர் வசதி இல்லாத காரணத்தினால் குடி நீருக்கு பல சிரமங்களுக்கு உட்பட்டிருந்தோம் மலசலத்துக்கு கூட செல்ல வேண்டுமாயின் தண்ணீர் இல்லை பிறிதொரு இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை எனவும் குறிப்பிட்டார்

மற்றொருவர் கூறுகையில் மலசல கூடத்திற்கு கதவிற்கு பூட்டு இல்லை தண்ணீர் பைப்புக்க்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது நகர சபையினால் தண்ணீர் வழங்குவது குறைவு ,நகர சபையினால் மலசல கூடம் நகர சபையினால் சுத்தம் செய்யப்படுவதில்லை. இதனால் துர்நாற்றம் வீசுகின்றது இதனால் பொருட்களை வாங்க வருபவர்கள் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர் என கூறினார்

இது குறித்து நகர சபையினருக்கு பல தடவை எடுத்து கூறிய போதும் இதுவரை எது வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதே போன்று சுகாதாராப்பிரிவினரிடமும் பலதடவை எடுத்து கூறிய போதும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என வர்த்தகர்கள் குற்றம் சாட்டினர்.