பெண்ணின் வயிற்றிலிருந்து 191 புற்றுநோய்க் கட்டிகள் நீக்கம் : மருத்துவ வரலாற்றில் சாதனை!!

284

 

ஓமான் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரின் கர்ப்பப்பையிலிருந்து 191 புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி கேரளா மாநிலத்திலுள்ள “ஸ்டார் கெயார்” வைத்தியசாலை வைத்தியர்கள் உலக வரலாற்றில் சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
குறித்த பெண்ணிற்கு 4 மணித்தியாலங்கள் வரையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த புற்றுநோய்க் கட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.
அண்மையில் எகிப்து பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 186 புற்றுநோய்க் கட்டிகள் நீக்கப்பட்டிருந்தன. இது வரையில் அந்த சத்திர சிகிச்சையே உலக சாதனையாக இருந்தது.
இது தொடர்பில் வைத்தியர்கள் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறு வயிற்றிலிருந்த புற்று நோய்க் கட்டிகளை சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றியதால், தற்போது அவர கர்ப்பம் தரிக்கலாம்.
இந்த பெண் சத்திரசிகிச்சையின் பின் இரண்டு நாட்களில் வீட்டுக்குச் செல்லக்கூடிய நிலையும் காணப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தியாவில் இதுவரை ஒரு சத்திர சிகிச்சை மூலம் நீக்கப்பட்ட அதிகளவான கட்டிகளின் எண்ணிக்கை 84 எனவும், ஓமான் பெண்ணிற்கு செய்த இந்த சத்திர சிகிச்சை அதனை முறியடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.