இலங்கை அணியின் பயிற்சியாளராவாரா ஷெப்பல்??

351

Greg-Chappellஇலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் கிரேக் சப்பல் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளர் தென்னாப்பிரிக்காவின் கிரஹாம் போட் தனது ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ள விரும்பவில்லை என்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து புதிய பயிற்சியாளர் தேடுதல் வேட்டையை இலங்கை தீவிரமாக தொடங்கியுள்ளது.

பயிற்சியாளரை நியமிப்பதற்கான காலக்கெடு இந்த மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பலர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்துள்ளனர்.

65 வயதான சப்பல் 2005 முதல் 2007ம் ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர்.

அப்போது கங்குலி உள்ளிட்ட வீரர்களுடன் கருத்து வேறுபாடு, 2007ம் ஆண்டு உலக கிண்ணத்தில் இந்தியா படுதோல்வி உள்ளிட்ட பிரச்சினைகளால் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சப்பலை தவிர இந்தியாவைச் சேர்ந்த வெங்கடேஷ் பிரசாத், லால்சந்த் ராஜ்புத், மொகித் சோனி, அவுஸ்திரேலியாவின் ஷேன் டப், மைக்கல் ஓ சுலிவான், இங்கிலாந்தின் போல் பார்பிரேஸ், இயன் பொன்ட், நியூசிலாந்தின் கிராண்ட் பிராட்பர்ன், உள்ளூர் முன்னாள் வீரர்கள் மாவன் அத்தப்பத்து, களுவித்தாரன ஆகியோரும் பயிற்சியாளருக்கான போட்டியில் விண்ணப்பித்துள்ளனர்.