இன்று பலத்த காற்றுடன் அடை மழையை பெய்யலாம் : சூறாவளி விலகிச் செல்கிறது!!

715

இன்று இலங்கையின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி வடக்கு, வட மத்திய, ஊவா, தெற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

விஷேடமாக தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழை பெய்யும் வேளையில் பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை மேற்கு மற்றும் தெற்கு தி​சை கரைக்கு அப்பால் கடற் பகுதியில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 இற்கு இடைப்பட்ட கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

ஏனைய கடற் பிரதேசங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதுடன், மேற்கு மற்றும் தெற்கு கடற் பகுதியில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் தவிந்து இருக்குமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

அதேவேளை மேற்கு திசையில் இருந்து அரேபிய கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள சூறாவளி தற்போது கொழும்பிலிருந்து 600 கிலோ மீற்றர் தொலைவில் இருப்பதாகவும், தற்போது அது இலங்கையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது.