கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு, சீதுவ, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளில்,வீடுகளை உடைத்துக் கொள்ளையிட்டமை உள்ளிட்ட 18 குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூவர், நேற்று முன்தினம் நீர்கொழும்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
மேலும் இவர்களால் கொள்ளையிடப்பட்ட 9 மடிக்கணனிகள், 4 தொலைக்காட்சிகள், 4 டிஜிட்டல் கமராக்கள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், ரயிஸ் குக்கர், தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.
சந்தேகநபர்களை நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை, எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.





