அசாரம் பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு மையம்!!

593

asaram bapuஇந்தியாவின் ஜோத்பூரில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அசாரம் பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு மையம் செயலபட்டுவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அசாரம் பாபு மீது தொடர்ந்து பல பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இவர் அவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த பல பெண்களை வற்புறுத்தி பலாத்காரம் செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அசாரமின் ஆசிரமத்தில் கருக்கலைப்பு மையம் செயல்பட்டதாக குஜராத் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அசாரமின் சூரத் ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண் ஒருவர் கூறுகையில் நான் அசாரமின் ஆசிரமத்தில் 1997 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை தங்கியிருந்தேன்.

என்னை அசாரம் 2001 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். அதிலிருந்து என்னை அடிக்கடி உடல் ரீதியாக அவர் துன்புறுத்தியுள்ளார்.

அவரின் ஆசிரமத்தில் கருக்கலைப்பு மையம் இருந்தது. அசாரமால் கர்ப்பமாகும் பெண்களுக்கு அங்கு கட்டாய கருக்கலைப்பு செய்யப்படும் இதனை ஆசிரமத்தின் மேற்பார்வையாளரான துருவ்பென் கவனித்துக்கொள்வார் எனக் கூறியுள்ளார்.