நியூயோர்க்கின் பரபரப்பான வீதிகளில் 100 இளம்பெண்களை மேலாடையின்றி புகைப்படம் எடுத்த புகைப்படக்கலைஞர்!!

603

top lessஅமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரத்தின் பரபரப்பான வீதிகளில் 100 இளம்பெண்களை மேலாடையின்றி நிற்க வைத்து புகைப்படம் எடுத்து சாதனை புரிந்திருக்கின்றார் பிரபல புகைப்படக்கலைஞர் ஒருவர்.

நியூயோர்க்கின் பிரபல புகைப்படக்கலைஞர் ஜோர்டன் மட்டேர் என்பவருக்கு நியுயோர்க் நகரத்தின் பல பரபரப்பான வீதிகளில் மேலாடையின்றி பெண்களை நிற்க வைத்து புகைப்படம் எடுக்கும் வேலை ஒன்று அவருடைய விளம்பரக்கம்பெனியில் இருந்து கொடுத்திருந்தனர்.

இந்த வேலையை வேறு யாரும் ஏற்காத நிலையில் இதை ஒரு சவாலாக எடுத்து இணையதளங்களில் விளம்பரங்கள் கொடுத்து 100 இளம்பெண்களை வரவழைத்து அவர்களை நியூயோர்க்கின் பிஸியான வீதிகளில் மேலாடையின்றி நிற்க வைத்து விதவிதமாக புகைப்படம் எடுத்து சாதனை புரிந்துள்ளார். இந்த திட்டத்துக்கு அவர் வைத்த பெயர் அன்கவர்ட் . (UNCOVERED) என்பதாகும்.

மேலும் நியூயோர்க்கில் பெண்கள் மேலாடையின்றி வெளியே வரலாம் என்று சட்டப்படி இருப்பதால் அவர் சட்டரீதியாக எவ்வித சிக்கலையும் சந்திக்கவில்லை. ஆனால் சில இடங்களில் பொதுமக்கள் வேடிக்கை பார்க்கும் அளவுக்கு கூடிவிட்டதால் போக்குவரத்து தடைபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஒருசிலர் மேலாடையின்றி போஸ் கொடுத்த பெண்களிடம் அத்துமீறி நடந்ததாகவும், அவர்களை அவர் கண்டித்து அனுப்பியதாகவும் தெரிவித்தார்.