விஷ ஊசி ஏற்றிக் கொண்டு காதலர்கள் ஒன்றாக தற்கொலை!!

576

sucideகாதலனும் காதலியும் தமக்குத் தாமே விஷ ஊசி ஏற்றி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் வெள்ளவாய பிரதான பாதையின் காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வெள்ளவாய பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, விரைந்த பொலிஸார் மேற்படி இருவரது சடலங்களை மீட்டனர்.

அத்துடன் விஷக் குப்பியொன்றும் ஊசியொன்றையும், அடையாளங்களை உறுதிப்படுத்தும் ஆவணமொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மருத்துவமனையில் சேவையாற்றும் தாதி ஒருவரும் கடற்படையில் கடமயாற்றும் கடற்படை வீரர் ஒருவருமே தற்கொலை செய்துகொண்டவர்களென்று ஆரம்ப விசாரணையின் போது தெரிய வந்துள்ளது

தற்கொலை செய்து கொண்ட தாதி சூரியகமை என்ற இடத்தைச் சேர்ந்தவரென்றும், கடற்படை வீரர் பதுளையைச் சேர்ந்த வாசனாகம என்ற இடத்தைச் சேர்ந்தவராவார்.

இவ்விருவரும் தத்தமது வீட்டாருக்கு தாம் தற்கொலை செய்து கொள்வதாக கடிதங்களையும் அனுப்பியுள்ளனர். அதன் பிறகே விஷ மருந்துடனான ஊசியை ஏற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவ் விருவருக்கும் ஏற்கனவே திருமணம் முடித்து இரு குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையிலேயே இருவரும் புறம்பாக காதல் வலையில் சிக்கியிருந்தனர்.

தற்கொலை செய்து கொண்ட தாதி தனது கணவனுக்கும் தற்கொலை செய்து கொண்ட கடற்படை வீரர் தனது மனைவிக்கும் இரு குழந்தைகளுக்கும் தனித்தனியாக கடிதங்களை தபாலில் சேர்த்துவிட்டே இவ்விருவரும் விஷ ஊசி ஏற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.