ராஜா ராணி 25வது நாள் : கமலஹாசனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் அட்லி!!

463

Adlyஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கிய படம் ராஜா ராணி. இப்படம் சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தன்னுடைய முதல் படத்திலேயே நல்ல தரமான காதல் படங்களை இயக்குவதில் ஒரு நிபுணர் என்பதை நிரூபணம் செய்துள்ளார் அட்லி. இந்த அறிய வாய்ப்பு எல்லா அறிமுக இயக்குனர்களுக்கும் அமைந்துவிடுவதில்லை. அவர் மீதான இருந்த எதிர்பார்ப்பையும் மீறி மாபெரும் வெற்றியடைந்துள்ளார் அட்லி.

நேற்று படத்தின் 25வது நாளை முன்னிட்டு நடிகர் கமலஹாசனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் அட்லி. இதுகுறித்து அட்லி கூறும்போது,

ராஜா ராணி படத்தை கமல் சார் தான் துவக்கி வைத்தார். வெற்றி பெற்றதும் அவரிடமே ஆசி பெறவேண்டும், அவருக்கு இந்த வெற்றியை சமர்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். என்னுடைய உழைப்பு மற்றும் அதன் பிரதிபலனாக கிடைத்த வெற்றி ஆகியவை பற்றி விவரமாக கேட்டு அறிந்தவர். படத்தின் சிறு நுணுக்கத்தை விசாரித்த அந்த பொது மனிதரின் திரை உலக ஞானம் எவ்வளவு பெரியது என புரிந்தது.

இந்த உன்னதமான, உற்சாகமான நேரத்தில் எனது தயாரிப்பாளர்கள் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஏ.ஆர்.முருகதாஸ், நெக்ஸ்ட் பிக் பிலிம்ஸ் ஆகிய நிறுவனத்தினருக்கு என் மனமார்ந்த நன்றிகள். என்னுடைய படத்தில் பணியாற்றிய நடிக, நடிகையர் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி என்று அவர் கூறினார்.