வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் விமானப்படை வீரர் படுகாயம்!!

1229

 
வவுனியாவில் இன்று (09.12.2017) மாலை 4 மணியளவில் கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் வன்னி விமானப்படைத்தளத்தில் பணியாற்றும் விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று மாலை 4 மணியளவில் வன்னி விமானப்படை தளத்திற்கு அருகில் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த விமானப்படை வீரரை நுவரெலியாவிலிருந்து வந்த மோட்டார் கார் மோதியதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த வன்னி விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பாக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.