சீனாவில் 62 மாடிக் கட்டிடத்தில் சாகச முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் தவறி வீழ்ந்து மரணம்!!(வீடியோ)

492


சீனாவில் 62 மாடிக் கட்டிடத்தில் சாகசம் செய்ய முயன்ற இளைஞன் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.சீனாவைச் சேர்ந்த வு யாங்கிங் என்ற இளைஞன் உயரமான கட்டிடங்களின் மீது ஏறி சாகசங்கள் செய்து வந்தார். அவற்றை வீடியோ செய்து சீன இணையத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.

அவரின் சாகசங்களைக் கண்டு அவரை சீனாவின் சூப்பர் மேன் என்று அழைத்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரின் சாகச முயற்சியே அவருடைய மரணத்திற்கான காரணமாக அமைந்துவிட்டது.யாங்கிங் சீனாவில் உள்ள 62 மாடிக் கட்டிடத்தின் மாடியில் சாகசம் செய்வதற்காகத் தயாரானார். அதை வீடியோ எடுக்க அனைவரும் தயாராக இருந்தனர்.அவர் மாடியில் ஏறி இரண்டு கால்களையும் கீழே தொங்கவிட்டு கைகளால் கட்டிடத்தைப் பிடித்திருந்தார்.
சில நிமிடங்களில் கை நழுவி கீழே வீழ்ந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.