திட்டமிடலின் போது மக்­களின் கருத்­துக்கள் உள்­வாங்­கப்படும் : வவுனியாவில் அமைச்சர் ப.சத்­தி­ய­லிங்கம்!!

362

வட­மா­கா­ணத்தின் சுகாதாரத்துறை அபிவிருத்திக்கான திட்ட­மி­ட­லின்­போது பொது­மக்­களின் கருத்­துக்கள் உள்­வாங்­கப்­ப­டு­மென்று வட­மா­காண சுகா­தார அமைச்சர் வைத்­தியக் கலா­நிதி பத்­ம­நாதன் சத்­தி­ய­லிங்கம் தெரி­வித்தார்.

வவு­னியா – கோவில்­குஞ்­சுக்­குளம் பகு­தியில் பொது­மக்­களால் ஏற்­பாடுசெய்­யப்­பட்ட வர­வேற்பு நிகழ்வில் கலந்­து­கொணடு பேசிய­போதே அவர் இவ்­வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரி­வித்த அவர்..

வவு­னியா மாவட்­டத்தின் வடக்கு பிர­தேசம் மற்றும் பால­மோட்டை பகு­திகள் கடந்­த­கால யுத்­தத்­தினால் அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டன. அத்­துடன், சுகா­தாரம் உட்­பட ஏனைய அடிப்­ப­டைத் ­தே­வைகளை உட­ன­டி­யாக பூர்த்­தி­செய்­ய­ வேண்­டி­யுள்­ளது.

எனவே மக்­க­ளுக்­கான சுகா­தார அபி­வி­ருத்தி தொடர்­பான திட்­ட­மி­ட­லா­னது அவ­சர, இடைக்­கால மற்றும் நீண்ட கால நோக்கில் மூன்று கட்­டங்­க­ளாக மேற்­கொள்­ளப்­படும். இதன்­போது பொது­மக்­களின் கருத்­துக்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் வழங்­க­ப்படும்.

இதன் போது அப் பகுதி மக்கள் அமைச்­சரிடம் தமது பிர­தேச சுகா­தார நிலை­மைகள் தொடர்பில் எடுத்­துக்­கூறியபோது..

தங்­க­ளு­டைய பிர­தே­சத்தில் வைத்­தி­ய­சாலை வச­திகள் இல்­லை­யெ­னவும் இதற்­காக 25 கி.மீ.க்கு அப்­பா­லுள்ள ஓமந்தை வைத்­தி­ய­சா­லைக்கே செல்­ல­வேண்­டி­யுள்­ள­தா­கவும் தெரிவித்­தனர். இவ்­வா­றான நிலையில் தமக்கு போக்­கு­வ­ரத்து வச­திகள் குறை­வாக காணப்­ப­டு­வதால் தங்கள் பகு­தியில் வைத்­தி­ய­சாலை வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­ வேண்­டு­மெ­னவும் கேட்­டுக்­கொண்­டனர்.

இதே­வேளை தமது பிர­தே­சத்­தி­லுள்ள குஞ்­சுக்­குளம் பாட­சாலை அதிபர் இல்­லாத நிலையில் பல­கா­ல­மாக இயங்­கு­வ­தா­கவும் உட­ன­டி­யாக அதிபர் ஒரு­வரை நிய­மிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­ட­னர்.

மேலும் நாட்டின் அசா­தா­ரண சூழ்­நிலை நில­வி­ய­போது தங்கள் பகு­தியில் இலங்கை செஞ்­சி­லுவைச் சங்­கத்­தினால் நடத்­தப்­பட்ட நட­மாடும் வைத்­திய சேவையில் தொண்­டர்­க­ளாக பல­வ­ரு­டங்கள் பணி­யாற்றிய இளைஞர், யுவ­திகள் தற்­போது வேலை­வாய்­ப்பின்றி இருப்­ப­தா­கவும் எதிர்­கா­லத்தில் சுகா­தா­ர­த்து­றையில் நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­டும்­போது தகு­தி­யா­ன­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்கவேண்­டு­மெ­னவும் கேட்­டுக்­கொண்­டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் அவர்கள் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகவும் இப்பகுதியில் வைத்தியசாலைக்கான தேவையுள்ளதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

vavuniya vavuniya2