வரலாற்றில் முதன்முறையாக இலங்கைக்கு பெருமை சேர்த்த இளைஞன்!!

903

சர்வதேச ரீதியாக இடம்பெற்ற மொடல் போட்டியில் இலங்கையர் ஒருவர் முதன்முறையாக முதலிடம் பெற்றுள்ளார்.

பிரான்ஸில் நடைபெற்ற 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொடல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் 176 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதில் இலங்கையரான ஜனுக ராஜபக்ஷ முதலிடம் பிடித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் சர்வதேச ரீதியான மொடல் போட்டி ஒன்றில் இலங்கை முதலிடம் பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவென ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் நகரில் இடம்பெற்ற போட்டியில் முதல் இடம்பிடித்தவர் கல்லேவெல பகுதியை சேர்ந்தவராவார்.

சர்வதேச ரீதியாக இலங்கைக்கு பெருமை சேர்த்த ஜனுக ராஜபக்ஷ நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்துள்ளார்.

பிரான்ஸில் நடைபெற்ற போட்டியில் பெல்ஜியம், கனடா, இத்தாலி, அமெரிக்க உட்பட 174 நாடுகளை சேர்ந்த மொடல்கள் கலந்து கொண்டதாக ஜனுக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டவர்கள் மத்தியில் தான் சற்று வித்தியாசமாக தெரிந்ததாக ஜனுக ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.