பஹரேனில் போதை பொருள் விற்ற இலங்கை, இந்தியருக்கு 5 வருட சிறை!!

810

prisonபஹரேனில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இலங்கையர் உள்ளிட்ட இருவருக்கு ஐந்து வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இவர்கள் பஹரேன் மேல் நீதிமன்றில் நேற்று ஆஜர் செய்யப்பட்ட போது நீதிமன்றம் இத்தீர்ப்பை அளித்துள்ளது.

41 வயதுடைய இந்திய முகாமையாளர் ஒருவரும் இலங்கை சாரதியுமே இவ்வாறு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்களுக்கு 3,000 தினார் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பஹரேனில் தடை செய்யப்பட்ட மெத்தாம்பேடேமைன் என்ற போதை மருந்தை இவர்கள் விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.