கனடாவில் யாழ். இளைஞன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை!!

542

கனடாவில் யாழ். வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலமுரளி கிருஷ்ணா என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 12ம் திகதி துப்பாக்கி சூட்டு விளையாட்டுக்கு சென்ற வேளையில், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கனடாவின் ரொறண்டோவில் வசித்து வரும் பாலமுரளி, Brock பல்கலைக்கழக மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.