ஒரு தோல்விக்காக வீரர்களை நீக்கமுடியாது : டோனி!!

332

Dhoniமொஹாலி ஒருநாள் போட்டியில் இஷாந்த் சர்மா மோசமான முறையில் பந்து வீசி இந்தியாவைத் தோற்கடித்து விட்டதால் ரசிகர்கள் பெரும் கோபத்துடனும், ஆதங்கத்துடனும் உள்ளனர்.

இந்நிலையில் அவருக்கு ஆதரவாக மறைமுகமாக அணித்தலைவர் டோனி கருத்து தெரிவித்துள்ளார்.

ஓரிரு போட்டிகளின் முடிவுகளை வைத்து யாரையும் அணியிலிருந்து நீக்குவது சரியாக இருக்காது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் அடிக்கடி அணியில் மாற்றம் செய்தால் அது பாதிப்பையே தரும். ஓரிரு போட்டிகளில் சரியாக விளையாடாமல் போவதை வைத்து அவர்களை நீக்குவது என்பது நியாயமாக இருக்காது.

தோல்வி என்பது எதிர்பாராததுதான். எனவே அந்தத் தோல்விக்கு சரியாக விளையாடாத வீரர்களை மொத்தமாக குற்றம் சாட்டி வெளியேற்றுவது சரியாக இருக்காது. அது அணிக்கு நல்லதும் அல்ல.

அவர்களுக்கு அனுபவம் கிடைக்க உதவ வேண்டும். அப்போதுதான் அவர்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும். அதற்கு அவர்களும் அணியில் இருப்பது அவசியம்.

அவர்கள் உண்மையில் சிறந்தவர்கள்தான். அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றார் டோனி.

இதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கெதிரான மீதமுள்ள 4 போட்டிகளில் இஷாந்த் சர்மா நீக்கப்பட வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது