வவுனியா – கணேசபுரம் பகுதியில் வீடு ஒன்று தீயில் எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா, கணேசபுரம் 40 வீட்டத்திட்டப் பகுதியில் வசிக்கும் இராமமூர்த்தி ஜெகநாதன் என்பவரது தற்காலிக வீடே இவ்வாறு தீயில் எரிந்து சேதமாகியுள்ளது.
குடும்பத்தினருடன் அவர் வவுனியா நகருக்குச் சென்றிருந்த வேளையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அயலவர்களின் முயற்சியினால் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து சேதமாகியுள்ளன.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.









