வவுனியா பிரதேச செயலக ஆலயத்தில் ஜயப்ப பூஜை வழிபாடு!!

768

 
வவுனியா மாவட்ட பிரதேச செயலகத்திலுள்ள விளாத்தியடி விநாயகர் ஆலயத்தில் ஜயப்பன் பூஜை வழிபாடு நேற்று திங்கள் கிழமை (18.12.2017) நண்பகல் 12 மணியளவில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ் ஐயப்ப பூஜை வழிபாடினை வவுனியா தவசிகுளம் பஜனை கோசப் பிரியர் மணிமண்டப சாமிமார்களும் மற்றும் வவுனியா கூமாங்குளம் ஆனந்த ஐயப்ப சாமிமார்களும் இணைந்து நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

இப் பூஜை வழிபாட்டில் வவுனியா பிரதேச செயலக ஊழியர்களும், பொதுமக்களும் கலந்து சிறப்பித்தார்கள்.