வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் நேற்றிரவு 10 வீடுகளில் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் நேற்று இரவு 10 வீடுகளில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் முறையிட்டுள்ளனர்.
நள்ளிரவு வேளையில் வீடுகளுக்குள் உட்புகுந்த திருடர்கள் 8 வீடுகளில் பெறுமதியான பொருட்கள் மற்றும் நகைகள் பணம் என்பனவற்றைத் திருடியுள்ளனர் . சுமார் ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகள் திருடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இவ்வீடுகளில் இருந்த இலத்திரனியல் பொருட்களை திருடிச் சென்ற திருடர்கள் அருகிலுள்ள பற்றைகளுக்குள் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். இச் சம்பவங்கள் குறித்து பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .





