வவுனியாவில் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடமாடும் சேவை!!

1413

2வவுனியா நகரசபையினால் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு கோவில்குளம் சிறுவர் பூங்காவில் நடமாடும் சேவை நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

உள்ளூராட்சி வாரமானது 21ம் திகதி தொடக்கம் 27ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் வவுனியா கோவில்குளம் பிரதேச மக்களுக்கு சேவைகளை வழங்கும் முகமாக நடமாடும் சேவை வவுனியா நகரசபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள், வரி அறவீடு, நூலக சேவைகள், காணி தொடர்பான வரிச் சேவைகள் தொடர்பான பல விடயங்கள் தொடர்பாக மக்களுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

கோவில்குளம் சிறுவர் பூங்கா வவுனியா நகரசபையால் கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி ஆலயத்தினருக்கு பராமரிப்புக்காக வழங்கப்பட்துடன் அங்கு வைக்கப்பட்டிருந்த இளங்கோ அடிகளாரின் சிலைக்கும் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா நகரசபைச் செயலாளர் க.சத்தியசீலன், பிரதேச செயலாளர் கா.உதயராசா, மாவட்ட விவசாய திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஏ.சகிலாபானு, சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சுரேந்திரன் மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.