ரணிலை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய சிறுவன்!!

688

 
நுவரெலியாவில் சிறுவர்களுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நத்தார் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

நுவரெலியா கெமுனு மாவத்தையில் அமைந்துள்ள பெய்ன்டர் மற்றும் எஸ்.ஓ.எஸ் சிறுவர் இல்லங்களை சேர்ந்த சிறுவர்களுடன் பிரதமர் நத்தார் கொண்டாடியுள்ளார்.

நத்தார் தினத்தன்று மாலை முதலாவதாக பெய்ன்டர் சிறுவர் இல்லத்திற்கு பிரதமர் சென்றுள்ளார். அங்கு நத்தார் கரோல் கீதங்களுக்கு செவிமடுத்த பிரதமர் அங்குள்ள 38 பிள்ளைகளுக்கு பரிசு வழங்கியுள்ளார். அதனை தொடர்ந்து அங்கு கண்கானிப்பு விஜயம் ஒன்றையும் பிரதமர் மேற்கொண்டுள்ளார்.

அதன் பின்னர் நுவரெலியா எஸ்.ஒ.எஸ் சிறுவர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள 120 சிறுவர்களுக்கு பிரதமர் பரிசு வழங்கியுள்ளார்.

இதன்போது எதிர்பாரத வகையில் சிறுவன் ஒருவர் புகைப்படம் வழங்கி, பிரதமரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்த விஜயத்தின் போது பிரதமருடன் அவரின் மனைவியும் கலந்து கொண்டுள்ளார்.