2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.
யாழ். ஹாட்லி கல்லூரி மாணவரான ஸ்ரீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புலோலி, புற்றளை, உபயகதிர்காமத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் யாழ். வடமராட்சி வலய கணணி வள முகாமையாளர் சிறிதரனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் P.மைக்கல் இயந்திரவியல் தொழினுட்பத் துறையில் அகில இலங்கை ரீதியில் பத்தாம் இடத்தையும், மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தையும், தயாளன் தயாநிதி உயிரியல் விஞ்ஞானத் துறையில் மாவட்ட ரீதியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.