தவறான உறவு : வெட்டுக் காயங்களுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

593

Knifபொகவந்தலாவ, போனோகோட் தோட்டத்தில் பெண் ஒருவருக்கும் ஆண் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக வெட்டுசம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் நேற்று மாலை 03 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்தனர்.
ஒரே தோட்டத்ததைச் சேர்ந்த திருமணமான ஒரு ஆணுக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கும் இருந்த தகாத உறவு அப்பெண்ணின் கணவனுக்கு தெரியவந்துள்ளது.

இதனை அறிந்த பெண்ணிண் கணவர் குறித்த நபரை கத்தியால் வெட்டி உள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

வெட்டு காயங்களுக்கு உள்ளான குறித்த ஆணும் பெண்ணும் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர் இதுவரை கைது செய்யபடவில்லை.

மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.