அப்பாவால் இப்படி ஆனேன் : ஜப்பான் மில்லியனரின் நெகிழ்ச்சிக் கதை!!

596

 
அப்பா விட்டுச் சென்ற ரெசிப்பியின் குறிப்பால் தான் இன்று இந்த அளவு வளர்ச்சி அடைய முடிந்துள்ளதாக ஜப்பானின் மில்லியனர் தெரிவித்துள்ளார்.

தெற்கு ஜப்பானின் ஒசகா பகுதியைச் சேர்ந்தவர் ஹிரோய்-டனகா(Hiroe-Tanaka). ரியல் எஸ்டேட் தொழில் புரிந்து வந்த இவரின் தந்தை, ஒசகாவின் முக்கிய உணவான குஷிகட்சு(Kushikatsu)-வை மிகவும் ருசியாக சமைப்பதில் வல்லவர்.

சிக்கனுடன் காய்கறிகள் சேர்த்து சமைக்கப்படும் அந்த உணவுதான் அவரின் மகளான ஹிரோயிக்கும் மிகவும் பிடித்த உணவாக இருந்துள்ளது.

திடீரென ஒருநாள் ஹிரோயின் தந்தை இறந்துவிட, அத்துடன் அந்த ரகசிய ரெசிப்பியும் இறந்துவிட்டதாக ஹிரோய் உட்பட அனைவரும் நினைத்துள்ளனர்.

ஹிரோயி 21வயதில் இருந்தபோதே அவரின் தந்தை மறைந்து விட்டதால் அவரால் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் போக, நண்பர் கைஜி நுகி நடத்தி வந்த உணவகத்தில் சமையல் கலை நிபுணராக பணியில் அமர முடிவு செய்தார்.

அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் அப்பாவின் கைப்பக்குவம் வராமல் தவித்தபோது 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியால் உணவகத்தை மூடிவிட நண்பர் கைஜி முடிவு செய்துள்ளார்.

அப்போதுதான் அதிர்ஷ்டவசமாக வீட்டின் ஒரு பெட்டியில், அப்பா விட்டுச் சென்ற அந்த ரெசிப்பியின் குறிப்புகள் கிடைத்துள்ளது. அதன்பின் மிகவும் உற்சாகமான ஹிரோயி மத்திய டோக்கியோ பகுதியில் சிறிய அளவில் உணவகத்தை துவக்கியுள்ளார்.

ஆரம்பம் முதலே குவிய தொடங்கிய கூட்டம், ஒரு கட்டத்தில் வாகன நெரிசல் ஏற்படும் அளவிற்கு ஒரு மணி நேரம் ஆனாலும் காத்திருந்து உணவை உட்கொள்ளும் தீவிர உணவுப் பிரியர்களின் வருகையால் கலைகட்டியுள்ளது.

தற்போது 46 வயதாகும் ஹிரோய் 146 உணவகங்களுக்கு சொந்தக்காரர் மட்டுமல்லாது ஜப்பானின் மல்டி-மில்லியனர்களுள் ஒருவராகவும் வளர்ந்துள்ளார்.

அப்பா விட்டுச் சென்ற அந்த ரெசிப்பி மட்டும் இல்லையென்றால் என்றோ காணாமல் போயிருப்பேன் என அவரே கூறுவது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

[news_list title=”இவற்றையும் படியுங்கள்” count=”10″ show_more=”on” show_more_type=”link” header_background=”#5681a0″ header_text_color=”#ffffff” hide_dots=”yes”]