இடைக்கால கட்டுப்பாடுகளை நீக்கியது பேஸ்புக்!!

383

facebookகழுத்து வெட்டப்படும் காட்சி உள்ளிட்ட மோசமான வன்முறைகளை வெளிப்படுத்தும் வீடியோ பதிவுகளை வெளியிடுவதற்கும் அவற்றை பகிர்ந்துகொள்ளவும் மீண்டும் அனுமதிக்கும் விதத்தில் சமூக இணைய வலைத்தளமான பேஸ்புக் தனது விதிகளை மாற்றிக்கொண்டுள்ளது.

இவ்வாறான வீடியோ காட்சிகள் நீண்டகால உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று வந்த முறைப்பாடுகளை அடுத்து, அமெரிக்காவை தலைமையகமாக கொண்டியங்கும் பேஸ்புக் வலைத்தளம் கடந்த மே மாதம் அவற்றுக்கு தற்காலிக தடைகளை அறிவித்திருந்தது.

ஆனால் தமது வலைத்தள பாவனையாளர்கள் அவ்வாறான வீடியோக்களை பார்ப்பதற்கும் அவற்றைக் கண்டிப்பதற்கும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்று பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

எனினும் வீடியோ காட்சிகளில் முன்கூட்டிய எச்சரிக்கைக் குறிப்புகளை சேர்ப்பது பற்றி ஆராய்ந்து வருவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த முடிவை தற்கொலைகளை தடுப்பதற்கான தன்னார்வ அமைப்பு உள்ளிட்ட பல தொண்டு நிறுவனங்கள் கண்டித்துள்ளன.

சிறார்களின் மனதில் சிறுவயதிலேயே வன்முறை எண்ணங்களைத் தூண்ட இவ்வாறான வீடியோ காட்சிகள் காரணமாகும் என்று அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
13 வயதுக்கு மேற்பட்ட எவரும் பேஸ்புக்கில் உறுப்பினராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.