ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வெற்றிபெறும் : இயன் பொத்தம்!!

365

Iyanஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணியை 5-0 என்ற ஆட்டக்கணக்கில் இங்கிலாந்து அணியால் வெற்றிகொள்ள முடியும் என இயன் பொத்தம் தெரிவித்துள்ளார்.

குளிர்கால ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் பிறிஸ்பேனில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு நடைபெற்ற கோடைகால ஆஷஸ் தொடரை 3-0 என்ற ஆட்டக்கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றிருந்தது.

எனினும் பல வேகபந்துவீச்சாளர்கள் உபாதைக்கு உள்ளாகியுள்ளதால் இங்கிலாந்து அணி தற்போது பலவீனமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.