வவுனியா பழைய பேரூந்து நிலையம் இன்று நள்ளிரவிலிருந்து மூடப்படுகின்றது!!

576

வவு­னியா பழைய பேருந்து நிலை­யம் இன்று நள்­ளி­ரவு முதல் மூடப்­ப­டு­கின்­றது என்று அறிவித்துள்ளார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்.

வவு­னி­யா­வில் புதிய பேருந்து நிலை­யம் அமைக்­கப்­பட்­டுத் திறக்­கப்­பட்ட பின்­னர் பேருந்து நிலை­யம் தொடர்­பான பிரச்சினை பூதா­க­ர­மா­னது. தனி­யார் பேருந்து போக்­கு­வ­ரத்­துத் தரப்­பி­ன­ருக்­கும், இ.போ.ச. பேருந்­துத் தரப்­பி­ன­ருக்­கும் இடையில் இந்த விட­யத்­தில் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. புதிய பேருந்து நிலை­யத்­தில் பேருந்­துச் சேவை­களை நடத்த எடுக்­கப்­பட்ட முயற்­சி­கள் பயனிக்கவில்லை.

இந்த விட­யம் தொடர்­பாக நேற்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் தலை­மை­யில் யாழ்ப்­பா­ணத்­தில் கலந்­து­ரை­யா­டல் நடைபெற்­றது.

வவு­னியா நகர சபைச் செய­லர், மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர், வவு­னியா மாவட்ட தலை­மைப் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி, தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர் சங்­கத் தலை­வர், செய­லா­ளர், இ.போ.சபை­யின் வட­க்கு மாகாண ஆணை­யா­ளர், வவு­னியா சாலை­யின் முகா­மை­யா­ளர் எனப் பல தரப்­புக்­கள் இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கு­கொண்­டன.

கலந்­து­ரை­யா­ட­லின் முடி­வில் வவு­னியா நகர சபைச் செய­லா­ள­ருக்கு இந்த உத்­த­ரவை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் பிறப்­பித்­தார். நகர சபைச் செய­லா­ள­ரின் நட­வ­டிக்­கை­க­ளுக்­குப் பொலி­ஸார் துணை நிற்க வேண்­டும் என்­றும் முத­ல­மைச்­சர் பணித்­தார்.

“வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரின் உத்­த­ர­வுப்­படி இன்று இரவு 12 மணி முதல் இ.போ.ச. பேருந்­து­கள் அனைத்­தும் புதிய பேருந்து நிலை­யத்­துக்­குச் செல்ல வேண்­டும். அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை நாம் எடுப்­போம்  என்று வவு­னியா நகர சபைச் செய­லா­ளர் தெரி­வித்­தார்.

வவுனியாவில் வரலாற்றில் முதன்முறையாக ஆதிவாசிகளுடன் கிரிக்கெட் போட்டி..